இலங்கையின் போர்க் குற்றவாளிகள் தொடர்பில் பிரித்தானிய தொழிற் கட்சியின் நிலைப்பாடு

Tamils Mullivaikal Remembrance Day United Kingdom
By Rukshy May 16, 2024 11:28 AM GMT
Report

இலங்கையின் (Sri Lanka) போர்க் குற்றாவளிகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் முன்னிறுத்துவதற்கான பற்றுறுதியை பிரித்தானிய தொழிற்கட்சி வெளிப்படுத்தியுள்ளது. 

பிரித்தானிய நாடாளுமன்றின் மக்களவையில் இன்று (16.05.2024) தொழிற் கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பு நடத்திய முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வில் கட்சியின் தவிசாளரும், பெண்கள் மற்றும் சமத்துவ விவகாரங்களுக்கான அமைச்சர் அனெலீஸ் டொட்ஸ் ஊடாக தொழிற் கட்சித் தலைவர் கியர் ஸ்ராமர் (Keir Starmer) வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்நீதித்துறை அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படுகின்றதா...! விக்னேஸ்வரன் கேள்வி

உயர்நீதித்துறை அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படுகின்றதா...! விக்னேஸ்வரன் கேள்வி

நினைவேந்தலுக்கான நாள்

இந்த ஆண்டு பிரித்தானியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலில் தொழிற் கட்சியே வெற்றி பெறும் எனக் கணிப்பிடப்பட்டுள்ள நிலையில் கொடூரச் செயல்களால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் தப்பியோருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தனது இதயம் நிறைந்த இரங்கலை ஸ்ராமர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் போர்க் குற்றவாளிகள் தொடர்பில் பிரித்தானிய தொழிற் கட்சியின் நிலைப்பாடு | British Labor Party Position Sri Lankan War Crimes

இந்நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நினைவேந்தலுக்கான நாள் மட்டுமன்றி, அவசரமாக நீதி கிட்ட வேண்டியதை நினைவூட்டும் நாளாகும்.

கொடூரமான குற்றங்களைப் புரிந்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதன் மூலமே மடிந்த மக்களை நினைவேந்தி மதிப்பளிக்க முடியும்.

கடந்த கால அநீதிகள்

தமிழ் மக்கள் முகம்கொடுத்த கொடூரக் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறும் வகையில் அனைத்துலக சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை கடந்த கால அநீதிகளுக்கு பரிகாரம் அளிக்கும் காத்திரமான நடவடிக்கைகளை இலங்கை எடுக்கத் தவறியதை தொழிற் கட்சித் தலைவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இலங்கையின் போர்க் குற்றவாளிகள் தொடர்பில் பிரித்தானிய தொழிற் கட்சியின் நிலைப்பாடு | British Labor Party Position Sri Lankan War Crimes

மேலும், தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்துலகக் குற்றங்களைப் புரிந்தவர்களை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் முன்னிறுத்தும் நடவடிக்கைகளை பிரித்தானிய அரசாங்கம் முன்னின்று செயற்படுத்த வேண்டும் என்றும் தொழிற் கட்சித் தலைவர் கியர் ஸ்ராமர் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு, தமிழ் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுவதன் அவசியத்தையும் ஸ்ராமர் நினைவூட்டியதோடு, இலங்கையில் நிரந்தர சமாதானமும், நல்லிணக்கமும், தமிழ் மக்களுக்குப் பரிபூரணமான அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிகழ்வில் டேம் சிபோன் மக்டொனா, கத்தரின் வெஸ்ற், சேர் ஸ்டீபன் ரிம்ஸ், கரத் தொமஸ், ஜேமரஸ் முறே, சாறா ஜோன்ஸ், ஜோன் மக்கொனெல், டோன் பட்லர், வீரேந்திர சர்மா, பரி காடினர் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் உரையாற்றியுள்ளனர்.

இலங்கை இந்திய கப்பல் சேவை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை இந்திய கப்பல் சேவை தொடர்பில் வெளியான தகவல்

தமிழ் மக்கள் மீது தொடரும் அடக்குமுறை: குரலற்றவர்களின் குரல் அமைப்பு சுட்டிக்காட்டு

தமிழ் மக்கள் மீது தொடரும் அடக்குமுறை: குரலற்றவர்களின் குரல் அமைப்பு சுட்டிக்காட்டு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US