அநுர குழுவினரின் இந்திய விஜயம்:சாதகமான அறிக்கையை எதிர்பார்க்கும் கஞ்சன
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, தனது இந்திய விஜயம் தொடர்பாக சாதகமான அறிக்கைகளை வெளியிடுவார் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்க குழுவினரின் இந்திய விஜயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
எரிசக்தி துறைகளின் வளர்ச்சி
இது தொடர்பில் மேலும் கூறுகையில், இந்தியா உட்பட உலகின் எந்த நாட்டிலிருந்தும் நம் நாட்டில் முதலீட்டாளர்களின் தேவை குறித்து தேசிய மக்கள் சக்தி பரந்த அளவிலான அனுபவத்தை பெற்றிருக்கக்கூடும்.
இந்தியாவின் எரிசக்தி துறைகளின் வளர்ச்சியை பார்த்த பின்னர் அதனை நிராகரிப்பதற்கான காரணங்களை தேசிய மக்கள் சக்தி முன்வைக்காது என்று தாம் நம்புவதாகவும் காஞ்சன குறிப்பிட்டுள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்க, தனது பாரம்பரிய உடையை புறக்கணித்து, ஐரோப்பிய ஆடைக் குறியீட்டின்படி ஆடை அணிந்துள்ளார். எனவே அவர் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை அவரது தொழிற்சங்கங்கள் புரிந்துகொள்ளவில்லை.
இந்திய விஜயம்
ஒவ்வொரு மாதமும் அரசியல் கட்சிகள் இந்தியாவுக்கு செல்வது மிகவும் பொதுவானது, ஆனால் ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) இந்தியாவுக்கு சென்றிருப்பது இதுவே முதல் முறை என்று அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் ஏகேடி என்ற அநுரகுமார திஸாநாயக்கவிடம் இருந்து, இலங்கைக்கு வரும் இந்திய முதலீட்டாளர்கள் குறித்து சாதகமான அறிக்கையை கேட்க தாம் காத்திருப்பதாக அமைச்சர் விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.