களுத்துறையில் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை
களுத்துறை - மத்துகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பின்னகொட பிரதேசத்தில், குடும்பஸ்தர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(27) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பின்னகொட - அகலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடையவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இருதரப்பினருக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த கொலை சம்பவத்துக்கு காரணம் என பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று(28) தெரிவித்துள்ளது.
கொலை சம்பவம்
இந்த சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான நபர் படுகாயமடைந்த நிலையில் வேத்தேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸ் மேற்கொண்டு வருவதாகவும்
எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 46 நிமிடங்கள் முன்

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
