சமூக ஊடகங்களில் பரவும் போலி அழைப்பிதழ்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
'ஸ்ரீ தலதா வழிபாடு' ஆரம்ப நிகழ்வு தொடர்பில் போலி அழைப்பிதழ் ஒன்று பரப்பப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஸ்ரீ தலதா வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்க, பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் இந்த போலி அழைப்பிதழ் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிபாடு
இந்த அழைப்பிதழ், ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்கவின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ தலதா வழிபாடுக்காக யாருக்கும் இதுபோன்ற சிறப்பு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த போலி ஆவணத்தின் அடிப்படையில் ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக ஒரு விசேட(விஐபி) வரிசை அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் போலிச் செய்திகள் பரவி வருவதாகவும், அவற்றில் எந்த உண்மையும் இல்லை என்றும் சுட்டிக்காட்டபட்டுள்ளது.
கில்லியை ஓரங்கட்டி முதல் நாள் ரீ-ரிலீஸ் வசூலில் மாஸ் காட்டிய ரஜினியின் படையப்பா... தெறிக்கும் வசூல் Cineulagam