நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இளைஞன் மாயம்
நாவலப்பிட்டி - கலபட நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
நாவலப்பிட்டி வெஸ்டோல் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் ஜாக்சன் என்ற 20 வயது இளைஞரே காணாமல் போயுள்ளார்.
காணாமல்போன இளைஞர், அவரது நான்கு நண்பர்களுடன் நேற்று (17) காலை கலபட நீர்வீழ்ச்சிக்கு கட்டுப்பாட்டாளர்களுக்கு தெரிவிக்காமலும், பிரதான நுழைவாயிலில் பற்றுச்சீட்டுக்களைப் பெறாமலும் காட்டின் வழியாக நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.
தேடுதல் நடவடிக்கை முன்னெடுப்பு
காணாமல்போன இளைஞன் கொழும்பில் வேலை செய்பவர் எனவும் புத்தாண்டு விடுமுறைக்காக வீடு திரும்பியிருந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறையில் வந்தவர் தனது நண்பர்களுடன் வெளியே சென்றிருந்தபோது இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞரை தேடுவதற்காக மக்கள் நடவடிக்கை எடுத்த போதிலும் அது பயனளிக்காமையால் அவரைக் கண்டுபிடிக்க கடற்படையினரின் உதவியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 15 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan