அமெரிக்காவின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தாய்வானுக்கு பயணம் - உலக செய்திகள்
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை (கீழவை) தலைவர் நான்சி பெலோசி தாய்வானுக்கு பயணம் மேற்கொண்டு 12 நாட்களே ஆன நிலையில், அமெரிக்க மேலவை உறுப்பினரான ஜனநாயக கட்சியின் எட் மார்கே தலைமையில் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மீண்டும் தாய்வானுக்கு சென்றுள்ளது.
தைபே விமான நிலையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அமெரிக்க அரசாங்கா விமானம் வந்திறங்கிய காட்சிகளை தாய்வான் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக வந்துள்ள அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது.
இதன்போது, இருதரப்பு உறவுகள், பிராந்திய பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தாய்வான் தலைவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்துவர் என்று அங்குள்ள அதிகாரபூர்வமில்லாத அமெரிக்க தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தாய்வான் நீரிணை பகுதியில் நேற்று 10 போர் விமானங்கள் உட்பட சீன இராணுவத்தின் 22 விமானங்கள், 6 கடற்படை கப்பல்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
