இலங்கைக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள IMF - ரூபாவின் பெறுதியில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கைக்கான கடன் வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியம் கிட்டத்தட்ட ஒப்புதல் அளித்துள்ள நிலையில், உள்நாட்டு பொருளாதார நிர்வாகம் தொடர்பான சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய வங்கியால் பணம் அச்சிடுவது கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட முதல் விடயமாகும். அதற்கு நிதி வரம்பு விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ரூபாயின் மதிப்பு சுதந்திரமாக தீர்மானிக்கப்பட வேண்டும்
ரூபாயின் வீழ்ச்சியைத் தடுப்பதற்காக, மத்திய வங்கியும் டொலர்களை செலவழிக்க ஒரு குறிப்பிட்ட வரம்பை விதிக்கவுள்ளது.
ரூபாயின் மதிப்பு சுதந்திரமாக தீர்மானிக்கப்பட வேண்டும் என்பது நாணய நிதியத்தின் கொள்கையாகும். அவ்வாறு செய்தால் ஒரு டொலருக்கான ரூபாய் மதிப்பு மீண்டும் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து கட்டுப்பாடுகளுக்கு மேலதிகமாக, தவறான தகவல்களை சமர்ப்பித்து நாட்டின் நலன்புரி நன்மைகளை பெறும் நபர்களை நீக்குமாறு சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிவுறுத்தல்களுக்கு உட்பட்டால், இலங்கைக்கான 290 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை சர்வதேச நாணய நிதியம் அங்கீகரிக்கும்.
அதற்கான இயக்குநர்கள் குழு கூட்டம் இம்மாதம் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை போராட்டங்களின் பின்னணி 23 மணி நேரம் முன்

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri

லண்டனில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... தாயாரும் இரண்டு பிள்ளைகளும்: வெளிவரும் பகீர் பின்னணி News Lankasri

ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ Cineulagam
