மேலும் வலுவடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி! கட்டண குறைப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு
அமெரிக்க டொலருக்கு இணையாக ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதை அடுத்து உணவு, நுகர்வு பொருட்கள் உட்பட இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் படிப்படியாக குறைவடையும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தெஹியோவிட்ட பகுதியில் ஏற்பட்ட நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
விலைகள் குறையும்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ரூபாவின் பெறுமதி வலுவடைந்திருப்பது இந்த சந்தர்ப்பத்தில் ஏற்றுமதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும் அது தற்காலிகமான நிலைமை.
ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் உள்ளிட்டவற்றின் விலைகள் குறையும் என்பதால், எதிர்காலத்தில் ஏற்றுமதி பொருட்களுக்கு எதிர்மறையான பாதிப்பு ஏற்படாது என குறிப்பிட்டுள்ளார்.
சர்ச்சைக்கு மத்தியிலும் CM விஜய் - த்ரிஷா ஜோடியாக அஜித் தயாருக்கு அஞ்சலி! படுவைரலாகும் வீடியோ Manithan
சூர்யாவின் திரை வாழ்க்கையில் இதுவரை நடக்காத விஷயம்.. தமிழக வசூலில் கருப்பு திரைப்படம் ருத்ரதாண்டவம் Cineulagam