டொலரின் பெறுமதி 300 ரூபாவாக வீழ்ச்சியடைந்தால்...! மக்களுக்கு அறிவிக்கப்பட்ட சாதகமான முடிவு
அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 300 ரூபாவாக வீழ்ச்சியடைந்தால், எதிர்காலத்தில் பாணின் விலை மேலும் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன கூறியுள்ளார்.
இதேவேளை, சரியான எடை இல்லாத பாணினை கொள்வனவு செய்வதனை தவிர்க்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
புதிய சட்டமூலம் கொண்டு வரப்படும்

இந்த நிலையில், பாணின் எடை மற்றும் தரம் தொடர்பான குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு புதிய சட்டமூலம் கொண்டுவரப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவத்துள்ளார்.
இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே தயாராகி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ரூபாவின் பெறுமதி அதிகரிப்பிற்கு ஏற்ப பல அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறைவடையும் என அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan