அதிவேக வளர்ச்சியை பதிவு செய்துள்ள ரூபாவின் பெறுமதி! மிக வேகமாக வீழ்ச்சியடையும் நிலை
இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில், ரூபா மதிப்பு மிக வேகமாக சரிய வாய்ப்புள்ளது என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
ரூபாவின் பெறுமதி இந்த அளவிற்கு திடீர் வளர்ச்சியடைவதற்கு, டொலரின் தேவை முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு விநியோகம் விடுவிக்கப்பட்டமையே இதற்கு காரணமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலையில், எந்தவொரு நாட்டின் நாணயத்தின் மதிப்பும் வலுவடையும், ஆனால், அதை நீண்டகாலமாக பராமரிக்க முடியாது.
மிக வேகமாக சரியும்
எப்படியிருப்பினும், இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில், ரூபாவின் மதிப்பு மிக வேமாக சரிய வாய்ப்புள்ளது என்றும் பேராசிரியர் வசந்த அத்துகோரள சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதற்குப் பல காரணிகள் காரணமாக அமைவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதாரச் செயற்பாட்டின் சில செயற்பாடுகளுடன் அதுவரை டொலர்களை வைத்திருந்த தரப்பினர் அந்த டொலர்களை சந்தையில் விடுவித்தமையும் இந்த நிலைமைக்கு மற்றொரு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இந்த வருட இறுதிக்குள் டொலரின் பெறுமதி மீண்டும் உயரலாம் என ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்திருந்த கணிப்பு தொடர்பில் பேராசிரியர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஃபிட்ச் மதிப்பீட்டு அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிட்டுள்ள போதிலும், இலங்கை தனது பொருளாதார விவகாரங்களை சரியான முறையில் நிர்வகித்து இலங்கை தனது பொருளாதார நடவடிக்கைகளை சரியான முறையில் நிர்வகித்தால் அதன் அந்நியச் செலாவணி வருமானத்தை வலுப்படுத்தினால் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் அது திறம்பட செயல்பட்டால் எதிர்பார்த்தப்படி ரூபாவின் மதிப்பு குறைவதற்கான சாத்தியக்கூறுகளை சமாளிக்கும் ஆற்றல் இலங்கைக்கு உண்டு என குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு தேவையான அரசியல் சூழல் ஒன்றை நாட்டு மக்களே உரிய முறையில் உருவாக்க வேண்டும் என பேராசிரியர் பிரியங்க துனுசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.