யாழில் பட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த கதி
யாழில் பட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
சுன்னாகம் தெற்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த கேதீஸ்குமார் கார்த்திகேயன் (வயது 07) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்டு
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவன் 31ஆம் திகதி பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் அங்கு மயக்கமுற்றுள்ளார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று (03) மாலை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவினால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam