புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற யாழ்ப்பாணம்
2025ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி, தமிழ் மொழியில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 194 என்ற அதிகபட்ச மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
இன்று (04) காலை நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலமாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
சிங்கள மொழி மூலம்
இந்நிலையில், சிங்கள மொழி மூலம் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர் காலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளதோடு,.அந்த மாணவன் 198 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
காணொளி - தீபன்
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (03) இரவு இணையத்தில் வெளியிடப்பட்டன.
அதன்படி, பரீட்சை முடிவுகளை திணைக்களத்தின் அதிகார பூர்வ வலைத்தளமான www.doenets.lk இல் காணலாம் .
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 10 ஆம் திகதி நாடு முழுவதும் 2,787 மையங்களில் நடைபெற்றதுடன், மொத்தம் 307,951 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் கூற்றுப்படி, இந்த ஆண்டு மொத்தம் 901 சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam