உலகம் முழுவதும் மக்களின் கவனத்தை ஈர்த்த 60 வயது பெண்
ஆர்ஜென்டினாவில் 60 வயது பெண் ஒருவர் அழகி போட்டியை வென்று உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்த காலகட்டத்தில் 60 வயதில் இயல்பாக செயல்படுவதே வியப்பாக பார்க்கப்படும் சூழலில், உடலையும், மனதையும் ஒருங்கே ஒரு நிலைப்படுத்தி அழகி போட்டியில் பட்டத்தை வெல்வது என்பது சாதாரணமான விடயம் கிடையாது.
உலகில் இலங்கையர்களை போன்று நல்லவர்கள் இல்லை! கொத்து ரொட்டி சர்ச்சையில் சிக்கிய சுற்றுலா பயணி நெகிழ்ச்சி
இந்த ஆண்டு ஆர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் அறுபது வயதான மரிசா ரோட்ரிக்ஸ் என்ற பெண் வெற்றி பெற்றுள்ளார்.
முதன்முறையாக 60 வயதில் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற பெண் என்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
மிஸ் யுனிவர்ஸ் அர்ஜென்டினா
மரிசா பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தின் தலைநகரான லா பிளாட்டாவில் வசிப்பவர்.இவர் ஒரு பத்திரிகையாளர் மற்றும் வழக்கறிஞர் ஆவார்.
இந்த வெற்றியின் மூலம், அடுத்த மாதம் நடைபெறவுள்ள மிஸ் யுனிவர்ஸ் ஆர்ஜென்டினா போட்டியில் பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்த மரிசா தகுதி பெற்றுள்ளார்.