12 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம் - அரச அதிகாரிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
மட்டக்களப்பு பகுதியில் 12 வயது சிறுவனிடம் தவறான நடந்துக் கொண்ட அரச அதிகாரி ஒருவரை 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்று(06.10.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மட்டக்களப்பு பகுதியில் உள்ள 12 வயது பாடசாலை மாணவரிடம் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையில் கணக்கெடுப்பு உத்தியோகத்தர் ஒருவர் தவறான நடந்துக் கொண்டதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, குறித்த நபரை நேற்று(06) பொலிஸார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், அவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.