வருடாந்தம் 1000 சிறுவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு - வெளியான அதிர்ச்சித் தகவல்
இலங்கையில் ஆண்டுதோறும் 19 வயதுக்குட்பட்ட சுமார் 900 முதல் 1,000 சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினருக்குப் புற்றுநோய் கண்டறியப்படுவதாக, தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் (NCCP) சமூக மருத்துவ ஆலோசகரான வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.
தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்துடன் இணைந்து, இன்று (09.09.2026) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து
மிகவும் பொதுவாகக் கண்டறியப்படும் புற்றுநோய்களின் வகைகள் இரத்தப் புற்றுநோய், நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோய், மூளைப் புற்றுநோய், எலும்புப் புற்றுநோய் மற்றும் கண் புற்றுநோய் என வைத்தியர் சுராஜ் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதற்கேற்ப தகுந்த சிகிச்சை அளித்தால், அதைக் குணப்படுத்துவதற்கான சாத்தியம் மிக அதிகம் என்று மேலும் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரைப் பாதிக்கும் புற்றுநோய்கள் மற்றும் அவற்றின் சிகிச்சை முறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், செப்டெம்பர் மாதம் உலகெங்கிலும் “குழந்தைப் பருவப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக” அனுசரிக்கப்படுகிறது.