ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரி
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக விபுல் மிஸ்ர நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பொறியியல் தலைவராகப் பணியாற்றினார்.
இந்நிறுவனத்தில் பொறியியல் பிரிவுத் தலைவராகவும் பொறுப்பான மேலாளராகவும் (Accountable Manager) பணியாற்றி வந்த இவர், தற்போது இப் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார்.
2024ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இணைந்த விபுல் மிஸ்ரா, விமானப் பொறியியல் மற்றும் சிரேஷ்ட விமானப் போக்குவரத்து நிர்வாகத்தில் பரந்த அனுபவம் கொண்டவராவார்.
முக்கிய பதவிகள்..
இதற்கு முன்னர், இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களான ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா மற்றும் இண்டிகோ ஆகியவற்றில் சிரேஷ்ட பதவிகளை வகித்துள்ளார்.

தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஒரு முக்கிய மறுசீரமைப்பு கட்டத்திற்குள் நுழைய ஆயத்தமாகி வரும் முக்கியமானதொரு சூழலில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஹன்ஸ் விஜயசூரிய தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மிஸ்ரவின் இந்நியமனம் நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறன் மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்கு பெரும் பக்கபலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் ஆயுத மோதல் மீறல்களுக்கான பொறுப்புக்கூறலில் முன்னேற்றமில்லை : ஜெனிவாக் கூட்டத் தொடரில் விசனம்