போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான 90 சதவீத அமைதி ஒப்பந்தம் தயார்! உக்ரைன் ஜனாதிபதி
ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் 90 சதவீதம் தயாராக உள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தனது புத்தாண்டு உரையில் தெரிவித்துள்ளார்.
எஞ்சியுள்ள 10 சதவீத இணக்கப்பாடே உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்று குறிப்பிட்ட அவர், உக்ரைனின் அழிவின் மூலம் கிடைக்கும் அமைதியைத் தாம் விரும்பவில்லை என்றும், நாட்டின் இறையாண்மையில் எவ்வித சமரசமும் செய்யப்படாது என்றும் உறுதியாகக் கூறினார்.
ட்ரோன் தாக்குதல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனான சந்திப்பைத் தொடர்ந்து, உக்ரைனுக்கு 15 ஆண்டுகால பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ள போதிலும், கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் (Donbas) பிராந்தியத்தை முழுமையாகக் கைப்பற்ற ரஷ்யா காட்டும் பிடிவாதம் பேச்சுவார்த்தையில் பெரும் தடையாக நீடிக்கிறது.

இதற்கிடையில், ரஷ்ய ஜனாதிபதி புடினின் இல்லத்தை இலக்கு வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகக் கிரெம்ளின் குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால், அமைதிப் பேச்சுவார்த்தையைத் திசைதிருப்பவே ரஷ்யா இத்தகைய பொய்களைப் பரப்புவதாக உக்ரைன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மறுப்பு தெரிவித்துள்ளன.
600 வடகொரிய வீரர்கள்
மறுபுறம், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது உரையில் படைகளின் வெற்றி குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன், ரஷ்யாவுடனான தனது நாட்டின் கூட்டணி அசைக்க முடியாதது எனப் பாராட்டியுள்ளார்.
உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு உதவியாகப் போரிட்ட சுமார் 600 வடகொரிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஜனவரி 6-ஆம் திகதி பாரிஸில் நடைபெறவுள்ள ஐரோப்பிய நாடுகளின் கூட்டம், அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் முக்கிய மைல்கல்லாக எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri