தனித்தீவாக சிக்கவுள்ள 90 குடும்பங்கள் : அவசர நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஊற்றுப்புலம் கிராமத்தில் தனித்தீவாக 90 குடும்பங்கள் சிக்கவுள்ள நிலையில் அவசர நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த பகுதியில் வள்ளுவர் பண்ணையையும், நாவலர் பண்ணையையும் இணைக்கும் வீதியில் அமைந்துள்ள பாலத்தின் நிர்மாண பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் குறித்த வீதி ஊடான வாகன போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பதிலாக அமைக்கப்பட்ட வீதிக்கு மேலாகக் குளத்து நீர் தேங்கி நிற்பதால் வாகன போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவசர தேவையின் நிமிர்த்தம் செல்பவர்கள், தொழிலிற்குச் செல்பவர்கள் பாதிக்கப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நோயாளர்களை அழைத்துச் செல்வதிலும், மாணவர்கள் பாடசாலை செல்வதிலும் பாரிய சவால் காணப்படுவதாகப் பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வாகனங்களை மறுபுறத்தில் நிறுத்திவிட்டு நோயாளர்களைத் தூக்கியே கடக்க வேண்டிய நிலை தற்போது உள்ளதாகவும், தொடர்ந்து மழை பெய்தால் முற்றாகப் போக்குவரத்து தடைப்பட்டு 90 குடும்பங்களும் தனியாக நீரினால் சூழ்ந்த பிரதேசத்தில் சிக்கிக்கொள்ளும் அபாய நிலை காணப்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறித்த வீதியானது புதுமுறிப்பு குளத்தின் அலைகரை பகுதியை ஊடறுத்துச் செய்வதால், தொடர்ந்தும் இந்த நிலை காணப்படும் என மக்கள் குறிப்பிட்டுள்ளனர். தற்பொழுது 19 அடி கொள்ளளவு கொண்ட புதுமுறிப்பு குளத்தின் நீர்மட்டம் 16 அடி 1 அங்குலமாகக் காணப்படுகின்றது.
தொடர்ந்தும் நீர் வருகை காணப்படுவதால் நீர்மட்டம் அதிகரித்து போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாய நிலை காணப்படுவதுடன், மக்கள் சிக்கிக் கொள்ளும் நிலையும் ஏற்படும். எனவே உடனடியாக மாற்று நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
