வீட்டிலிருந்து இரவில் கடத்தி செல்லப்பட்ட சிறுவன்! பொலிஸார் வெளியிட்ட தகவல்
அநுராதபுரம் - எப்பாவல, கிராலோகம பகுதியில் 9 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான சந்தேகநபரின் தொலைபேசி தரவுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி இன்று காலை கண்டி – கலஹா பகுதிக்கும் மாத்தளை பகுதிக்கும் இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குழந்தையுடன் நெருக்கமாக இருந்த சந்தேகநபர் நேற்று முன்தினம் மற்றும் நேற்றைய தினம் அவரது உறவினர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளதுடன், அதன்படி பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், எப்பாவல பிரதேசத்தில் மேலும் 03 பொலிஸ் குழுக்கள் இணைந்து குழந்தையை கண்டுபிடிக்க விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸார் வெளியிட்ட தகவல்
இது தொடர்பில் பொலிஸார் நேற்று தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்ததையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் நுவன் கௌசல்யா உத்தரவிட்டுள்ளார்.
கிரலோகம சுபோதி மகா வித்தியாலயத்தின் நான்காம் தர மாணவன் தேனெத் கௌரவ் பிரேமசுந்தர கடந்த 19ஆம் திகதி இரவு முதல் காணாமல்போயுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தாய் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, சிறுவனை கடத்தியதாக கூறப்படும் நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளதுடன், அவர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் எப்பாவல பொலிஸ் நிலையம் அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு 025-224 9122 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
