தமிழர் பகுதியில் தளம் அமைத்த இந்திய ரோ! விட்டு வைக்காத மொசாட்..
தனது நாட்டின் பாதுகாப்பிற்காக கனடா உட்பட எல்லா நாடுகளிலும், இந்தியாவின் புலனாய்வாளர்கள் இருக்கின்றார்கள் என்று பிரித்தானியாவிலுள்ள இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இந்தியாவிலிருந்து இங்கு வந்து வேலை செய்பவர்கள் புலனாய்வாளர்கள் இல்லை.
ஈரானில் மொசாட்டாக இருந்தவர்கள் ஈஸ்ரேலியர்கள் இல்லை. அங்கு வேலைக்கு சென்ற ஆப்கானிஸ்தவர்களும், இந்தியர்களும் ஆவர்.
இந்திய தூதரகத்தை பொறுத்தவரையில் ரோவின் தலைநகரமாக இயங்குவதாக தான் கருதப்படுகின்றது என்று குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு...



