வீட்டிலிருந்து கடத்தி செல்லப்பட்ட சிறுவன்! கண்டால் உடன் அறிவிக்குமாறு அவசர கோரிக்கை
அநுராதபுரம் - எப்பாவல, கிராலோகம பகுதியில் 9 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலான சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிரலோகம சுபோதி மகா வித்தியாலயத்தில் 04 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் குழந்தையின் தாய் எப்பாவல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அப்பகுதியில் மின் சாதன விற்பனையகம் ஒன்றினை நடத்தும் நபர் ஒருவரே சிறுவனை கடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக சிறுவனின் தாய் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
இந்நிலையை, சிறுவனை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரிடம் குழந்தை இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் கடத்தப்பட்ட சிறுவனுடன் நாவுல பிரதேசத்தில் உள்ள தனது சகோதரர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று (20ஆம் திகதி) அதிகாலை குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளமையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கமைய, சிறுவனை கடத்தியதாக கூறப்படும் நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளதுடன், அவர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் எப்பாவல பொலிஸ் நிலையம் அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு 025-224 9122 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.