வீட்டிலிருந்து கடத்தி செல்லப்பட்ட சிறுவன்! தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்குமாறு கோரிக்கை
அநுராதபுரம் - எப்பாவல, கிராலோகம பகுதியில் 9 வயது சிறுவன் கடத்தப்பட்டுள்ளதாக தாய் முறைப்பாடு செய்துள்ளார்.
கிரலோகம சுபோதி மகா வித்தியாலயத்தில் 04 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
இது தொடர்பில் குழந்தையின் தாய் எப்பாவல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அப்பகுதியில் மின் சாதன விற்பனையகம் ஒன்றினை நடத்தும் நபர் ஒருவரே சிறுவனை கடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக சிறுவனின் தாய் தெரிவித்துள்ளார்.
மேற்படி புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள குழந்தை தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் எப்பாவல பொலிஸ் நிலையத்திற்கு 025-2249122 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





ரஷ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் பார்க்கும் இந்தியா! அமெரிக்கா விடுத்த அடுத்த எச்சரிக்கை News Lankasri
