சமூகத்தை பயமுறுத்தும் ஜே.வி.பி.யினர்! வெளிக்கிளம்பும் பூதம்
ஜே.வி.பி அரசாங்கம் சமூகத்திற்கு லேசான பயமுறுத்தலை வெளியிட்டுள்ளதாகவும் பல தசாப்த காலங்களாக அவர்கள் மேற்கொண்ட பயமுறுத்தலும் அடாவடித்தனங்களும் அவர்களின் அடிமனதில் இருப்பதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று(20.08.2025) நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,
“அவர்களின் பேச்சுக்களை உற்று நோக்கினால் நாம் அவற்றை அறிந்து கொள்ளலாம். லால் காந்த பல்கலைக்கழக பேராசியர்கள் தொடர்பில் பேசிய விதம் அதை புலப்படுத்துகின்றது.
அரசாங்கத்தின் கடமை
சமூகத்தில் உயர்ஸ்தானத்தில் மதிக்கப்படும் அவர்களுக்கு இவர்கள் கூறி கருத்துக்கள் அதற்கு சான்றாகும் என்றார். அரசாங்கம் பதினொரு மாதங்களில் 1,427.9 பில்லியன் பணம் அச்சடித்துள்ளது.
பணம் அச்சடித்தல் மற்றும் பணப் புழகத்திற்கு தேவையான செயற்பாடுகளை செய்வதற்கான அதிகாரம் அரசாங்கத்திற்கு உண்டு. அது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை அரசாங்கம் என்ற வகையில் தெளிவுப்படுத்தும் கடமை உள்ளது.
ஆனால், அரசாங்கம் அவ்வாறான ஒன்றை செய்யவில்லை. நாடாளுமன்றில் பொருளாதார பிரதியமைச்சர் பணம் அச்சடிக்கவில்லை என்றார்.
நாங்கள் இதை சுட்டிக்காட்டுவது ஏனென்றால், அநுரகுமார திஸாநாயக்க எதிர்க்கட்சியில் இருக்கும் போது பணம் அச்சடிப்பதில் பலமான எதிர்வாதங்களை கொண்டிருந்தார். அதனாலேயே நாம் இந்த கேள்வியை அவரிடம் கேட்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 19 மணி நேரம் முன்

ரஷ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் பார்க்கும் இந்தியா! அமெரிக்கா விடுத்த அடுத்த எச்சரிக்கை News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
