ஆட்சியதிகாரம் தொடர்பில் அநுரவுக்கு மட்டுமே தெரிந்த இரகசியங்கள்! திலித்தின் வெளிப்படுத்தல்கள்..
நாட்டில் இன்று நடக்கும் ஆட்சி அரசாங்கத்திற்குரியது அல்ல. தேசிய மக்கள் சக்தியினர் இது அவர்களது ஆட்சி என்று நினைத்துக் கொண்டிருந்தால் அவர்களது எண்ணம் தவறானது என்று நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
ஆனால் யாருடைய தேவைக்காக இந்த ஆட்சி கொண்டு செல்லப்படுகின்றது என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நன்கு அறிவார். அவருக்கு எல்லாம் தெரியும் என்றும் திலித் ஜயவீர சுட்டிக்காட்டினார்.
குருநாகலில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டில் நடக்கும் அரசியல் குழப்பங்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இன்று நாட்டில் நடக்கும் அரசியல் குழப்பங்கள் ஏதற்காக நடக்கிறது என மக்களுக்கு தெரியாது. இவை புவியியல் அரசியல் நகர்த்தல்களாகும்.
மேலும், அரசியல் சூழ்ச்சிகளும் நடக்கின்றன. இன்று அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு என்ன கதைப்பதென்று தெரியாது. இரவு ஒன்று பகல் வேறொன்றுமாக இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் அவைத் தலைவரின் பக்கத்தில் அமர்ந்திருந்து விட்டு அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஒன்றும் தெரியாது என்று சொல்லும் அமைச்சர்களே உள்ளனர்.
ஆனால் கிராமத்தில் 50 வருடங்களுக்கு மேலாக கிளர்ச்சி செய்த ஜே.வி.பி சகோதரர்கள் எதிர்பார்த்த இடதுசாரிய அரசாங்கம் எங்கே போய்விட்டது. ஆயுதம் ஏந்தி தங்களின் சகபாடிகளை கொள்கைக்காக கொலை செய்தவர்களின் இன்றை நிலை கேள்விக்குரியாக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, இடதுசாரிய கொள்கைக்காக போஸ்டர் ஒட்டிய, முதலாளித்துவத்திற்கு எதிராக போராடிய சகோதரர்களின் எதிர்பார்ப்புக்கள் எங்கே போனது.
இன்று அரசாங்கத்தில் இருக்கும் சில தலைவர்கள் முதலாளித்துவத்தில் மண்டியிட்டுள்ளனர். நாம் இவற்றுக்கான முடிவுகளை காலத்துக்கு பாரம் கொடுத்து காத்திருப்போம் என குறிப்பிட்டுள்ளார்.




