திருடப்பட்ட கோப்பில் அநுரவின் முதலீட்டு விவகாரம்! கிழிக்கப்பட்ட ஹல்லோலுவயின் முகத்திரை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் துசித ஹல்லோலுவ, சட்டத்தை மீறி, மறைந்திருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு (CCD) நீண்ட விசாரணை நடத்தி 10 பேரை கைது செய்துள்ளது.
இந்நிலையில், துசித ஹல்லோலுவ அவ்வப்போது அளித்த வாக்குமூலங்கள் முரண்பாடாக இருப்பதாகவும் (CCD) தெரிவித்துள்ளது. துசித ஹல்லோலுவவிடம் இருந்து திருடப்பட்டதாக கூறப்படும் கோப்பில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கிரேக்கத்தில் உள்ள ஒரு கப்பல் நிறுவனத்தில் ரூ. 1.4 மில்லியன் முதலீடு செய்திருப்பது குறித்த முக்கியமான தகவல்கள் இருப்பதாக அவர், தெரிவித்திருந்தார்.
திருடப்பட்ட கோப்பு
ஆனால் இதுவரை நடந்த எந்தவொரு விசாரணையிலும் அத்தகைய கோப்பு திருடப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று CCD நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஹலோலுவ பயணித்த காரும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் சென்ற அதே திசையில் எந்த பயமோ சந்தேகமோ இல்லாமல் பயணித்ததை கண்காணிப்பு கருவிகள் கண்டறிந்துள்ளதாகவும், அதன்படி, அவர் இந்தக் குற்றத்தைச் செய்த குற்றவாளிகளுடன் இணைந்துள்ளாரா என்ற சந்தேகம் இருப்பதாகவும் CCD நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்துள்ளது.
சம்பவம் நடந்த நாளில் ஹலோலுவா பயன்படுத்திய கையடக்க தொலைபேசியை விசாரணைக்காக சிசிடியிடம் ஒப்படைக்குமாறு கூறப்பட்ட போதிலும், விசாரணையைத் தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் சீரியல் எண் மாற்றப்பட்ட மற்றொரு தொலைபேசியை சிசிடியிடம் ஹல்லோலுவ ஒப்படைத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
சம்பவம் நடந்த நேரத்தில் தனது தொலைபேசி காணமல் போனதாக ஹல்லோலுவ சிசிடியிடம் தெரிவித்த போதிலும், தொடர்புடைய தொலைபேசியின் பகுப்பாய்வு அறிக்கைகளின்படி, சம்பவத்திற்கு பிறகு மருத்துவமனையில் இருந்தபோதும் அவர் அதே தொலைபேசியைப் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் தெரியவந்துள்ளதாக சிசிடி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அவர் வேண்டுமென்றே தொலைபேசி காணமல்போனதாக பொய்யாகக் கூறி, விசாரணையைத் தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன், சீரியல் எண் மாற்றப்பட்ட புதிய தொலைபேசியை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்" என்று சிசிடி மேலும் கூறியுள்ளது.
சிங்கள மக்களால் “மா வெத்தா” என்று அழைக்கப்படும் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றவுடன், சமன் ஏகநாயக்க ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்ட உடனேயே நியமிக்கப்பட்ட அடுத்த பதவி, துசித ஹல்லோலுவ 'ஜனாதிபதிக்கான மக்கள் தொடர்பு இயக்குநர் என்பதாகும்.
இந்த விடயம் ரணிலுக்கும் ஹலோலுவவுக்கும் இடையிலான தொடர்பை எடுத்துகாட்டுகிறது என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் - காலை திருவிழா





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 7 மணி நேரம் முன்

2வது மனைவியுடன் Liplock, மாதம்பட்டி ரங்கராஜ்-ஜாய் கிரிஸில்டா ரொமான்டிக் வீடியோ... செம வைரல் Cineulagam

உக்ரைனில் கால் பதிக்கும் ஐரோப்பிய நாடுகளின் படைகள்! ரஷ்யா தொடர்பில் டிரம்ப் வழங்கிய உறுதி News Lankasri
