பிரித்தானியாவில் கோரச்சம்பவம் : கத்திக் குத்திற்கு இலக்காகிய டெடி பியர் ஐஸ்கிரீம் வியாபாரி
பிரித்தானியாவில் ஐஸ்கிரீம் வியாபாரி ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று(20) மாலை வடமேற்கு லண்டனின் வெம்பிளேயில் 38 வயதுடைய ஐஸ்கிரீம் வியாபாரி ஒருவரே கத்தியால் 8 முறை குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
31 வயதுடைய பெண்
மோங்க்ஸ் பூங்காவில் நடந்த கத்திக்குத்து சம்பவம் குறித்து மாலை 6 மணிக்கு பொலிஸார் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் கத்திக்குத்து காயங்களால் அவதிக்குள்ளான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
WEMBLEY. UK
— Abhay (@AstuteGaba) August 20, 2025
🔪AN ICE cream man was "stabbed eight times" until he died in a broad daylight attack, with cops launching a murder investigation.
August 20, 2025
The Metropolitan Police were called to reports of a #stabbing in Monks Park, Wembley, at around 6.10pm on Tuesday.… pic.twitter.com/onJg7XwcHT
இந்த வன்முறை சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இன்று அதிகாலை கொலை சந்தேகத்தின் பேரில் 26 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் 31 வயதுடைய பெண் கொலை சதி திட்டம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட ஐஸ்கிரீம் வியாபாரி தனது பெரிய டெடி பியர் பொம்மை ஐஸ்கிரீம் வண்டி மூலம் உள்ளூர் மக்களிடையே நன்கு அறியப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 22 மணி நேரம் முன்

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
