முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் கைது (Photos)
முல்லைத்தீவு - நாயாறு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று படகுகளை கைப்பற்றியதுடன், அதில் இருந்த 9 கடற்றொழிலாளர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்..
முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தினரும் கடற்படையினரும் இணைந்து நேற்று (26.04.23) இரவு நடத்திய சோதனை நடவடிக்கையின் போது நாயாறு கடற்பரப்பில் சுருக்குவலையினையும் ஒளிபாச்சி பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று படகுகளை கைப்பற்றி உள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம்
கைதான 2 கடற்றொழிலாளர்கள் கொக்கிளாய் பகுதியினை சேர்ந்தவர்கள் 7 கடற்றொழிலாளர்கள் முல்லைத்தீவு தீர்த்தக்கரை பகுதியினை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதான கடற்றொழிலாளர்களையும் சான்று பொருட்களையும் இன்று (27.04.2023) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களம் முன்னிலைப்படுத்திய போது கடற்றொழிலாளர்களை தலா ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்




