இலங்கைக்கு கிடைத்துள்ள பல மில்லியன் ரூபாய்
விவசாய ஏற்றுமதி மூலம் 2024 ஆம் ஆண்டில் 89,217 மில்லியன் ரூபாய் அந்நியச் செலாவணி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரலாற்றில் வாசனைப் பொருட்கள் ஏற்றுமதியிலிருந்து கிடைத்த அதிக வருமானம் இது என அதன் அபிவிருத்திப் பணிப்பாளர் உபுல் ரணவீர தெரிவித்துள்ளார்.
அந்நியச் செலாவணி
கடந்த வருடம் 44,262 மெட்ரிக் டன் வாசனைப் பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் இலங்கையின் அதிகபட்ச வருமானமாக, 89,217 மில்லியன் ரூபாய் பெறப்பட்டது.
இதன்படி, மிளகு ஏற்றுமதியிலிருந்து அதிகபட்ச வருமானமாக 51,524 மில்லியன் ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு 23,932 மெட்ரிக் டன்கள் மிளகு ஏற்றுமதி செய்யப்பட்ட மூலம் 47,436 மில்லியன் ரூபாய் வருமானம் பெறப்பட்டதாகவும், மீதமுள்ள வருமானம் ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளுக்கு மிளகு ஏற்றுமதி செய்வதன் மூலம் பெறப்பட்டுள்ளதாகவும் ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், 8,852 மெட்ரிக் டன் பாக்கு ஏற்றுமதி மூலம் 11,598 மில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதுடன், 2,317 மெட்ரிக் டன் சாதிக்காய் ஏற்றுமதி செய்யப்பட்டு 4,648 மில்லியன் ரூபாய் அந்நியச் செலாவணியை ஈட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
