நாட்டின் 51 வீதமான மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம்!
பாடசாலை மாணவர்களின் மதிய உணவுத்திட்டத்திற்காக 814 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான பாடசாலை மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மாகாணக் கல்வித் திணைக்களங்களுக்கு 814 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகை முற்பணமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களில் 51 வீதமானவர்களுக்கு மதிய உணவு
உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க உதவியின் கீழ் அரிசி, பருப்பு, டின்மீன் மற்றும் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிடுகிறது.
இதுவரை 11 இலட்சம் பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்ட நிலையில், மாணவர்களின் எண்ணிக்கையை அடுத்த பாடசாலை தவணையிலிருந்து இரட்டிப்பாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்படி அனைத்து பாடசாலை மாணவர்களில் 51 வீதமானவர்களுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.