கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
நாட்டிலுள்ள மாணவர்களின் எதிர்கால நலன்கருதி க.பொ.த உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் இணைந்து கொள்ளுமாறு கல்வியமைச்சர் சுசில் பிரேமயஜயந்த உரிய தரப்புக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 22ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தொழிற்சங்க நடவடிக்கைகளினால் தாமதம் அடைந்தன.
இந்த நடவடிக்கை மேலும் தாமதம் அடையுமாயின் அது மேலும் இரண்டு பரீட்சைகளையும் தாமதமாக்கும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.
சாதாரண தர பரீட்சையும் தாமதம் அடையலாம்

இந்த நடவடிக்கைகளினால் எதிர்வரும் சாதாரண தர பரீட்சையும் தாமதம் அடையலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறான செயற்பாடுகளினால் 40 இலட்சம் மாணவர்களின் எதிர்காலத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டினார்.
அண்மைக்காலமாக அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கல்வித்துறையை சேர்ந்தவர்களும் இதில் இணைந்துள்ளனர். இதன் காரணமாக பரீட்சை வினாத்தாள் திருத்தும் நடவடிக்கை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
இந்நிலையில் மாணவர்களின் நன்மை கருதி கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri