பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு
பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்றையதினம்(16.03.2023) வழமைபோன்று இடம்பெறும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த ஒருநாள் வேலைநிறுத்தம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை
மேலும் கூறுகையில்,அரசாங்கத்தின் வரிக் கொள்கையை எதிர்த்து ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து ஆசிரியர் தொழிற்சங்கமும் நேற்று(15.03.2023) ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தது.
இதனால் பாடசாலைக் கல்வியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று வழமை போன்று பாடசாலைக்கு சமூகமளிப்பதுடன் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் வழமைபோன்று இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.