நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம்: மக்கள் அவதி (Video)

Sri Lankan protests Sri Lanka Sri Lankan Peoples SL Protest Strike Sri Lanka
By Theepan Mar 15, 2023 07:14 AM GMT
Report

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரிக்கொள்கை மற்றும் மின்கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்கள் பணி பகிஷ்கரிப்பு முன்னெடுத்துள்ள நிலையில், பொது மக்கள் பாரிய சிரமத்தினை எதிர்கொண்டுள்ளனர்.

இன்றைய தினம் (15.03.2023) நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ள பணி பகிஷ்கரிப்பு காரணமாக பொது மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவ பீட விரிவுரையாளர்கள், மின்சார பொறியியலாளர்கள், வங்கி சேவை ஊழியர்கள், பெட்ரோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள், வீதி அபிவிருத்தி, கல்வித் துறை சார்ந்தவர்கள் உள்ளிட்ட 47 தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.

இந்த  பணி பகிஷ்கரிப்பு காரணமாகஅனைத்து மாவட்டங்களின் மக்கள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளனர்.  

யாழ்ப்பாணம்


இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைகளில் பதாகைகளைத் தாங்கியவாறு 20000 உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மூன்றில் இரண்டு பங்கு சம்பளத்தை வழங்க வேண்டும், மாணவர்களின் போதனை குறைபாட்டை நிவர்த்தி செய், பிள்ளைகளுக்குப் பாடசாலை உபகரணங்களைக் கொடு உள்ளிட்ட பல்வேறு பதாகைகளைத் தாங்கியவாறு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாடசாலைகளுக்கு வருகை தந்த மாணவர்களும் வீடுகளுக்கு திரும்பிச் சென்றுள்ளனர்.


மலையகம்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம்: மக்கள் அவதி (Video) | Sri Lankan Protests

தூரப் பகுதிகள், பிரதேசங்களில் உள்ள தோட்டங்களிலிருந்து பிரதான மற்றும் பிரதேச வைத்தியசாலைகளுக்குச் சிகிச்சைபெற வந்த மக்கள் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.

அதேவேளை, பாடசாலைகளுக்கு அதிபர், ஆசிரியர்கள் சமூகம் அளிக்கவில்லை. மாணவர்களின் வருகையும் இருக்கவில்லை. விடயம் அறியாமல் பாடசாலைக்கு சமூகம் அளித்த ஒரு சில மாணவர்கள் திரும்பிச்சென்றனர். மலையகப் பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களிலும், புகையிரத நிலையங்களிலும் பணிகள் இடம்பெறவில்லை. அரச வங்கிகள் உட்படப் பல துறையினரும் இப்போராட்டத்துக்கு ஆதரவு வழங்கினர்.

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில்  கல்வி நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்டத்தில் போக்குவரத்துச் சேவைகள் வழமை போன்று நடைபெற்றுவருவதுடன், மக்கள் தமது அன்றாட கடமைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வார்ப்பாட்டத்தில் கருப்பு கொடிகளை ஏந்தியவாறு சுமார் 60க்கு மேற்பட்ட கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இலங்கை ஆசிரியர் சங்கமும், ஆசிரியர் சேவை சங்கமும் இணைந்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம்: மக்கள் அவதி (Video) | Sri Lankan Protests

முல்லைத்தீவு 

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிபர், ஆசிரிய சங்கங்கள் மற்றும் சுகாதாரத் துறையினர், உள்ளிட்டோர் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பினால் பாடசாலை சென்ற மாணவர்கள் வீடு திரும்பிச் சென்றுள்ளார்கள். மேலும், மாவட்ட மருத்துவமனை உள்ளிட்ட பிரதேச வைத்தியசாலைகளில் சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளார்கள் இன்று மாவட்ட மருத்துவமனையில் கிளினிக் மற்றும் சிகிச்சைக்காக சென்ற நோயாளர்கள் மருந்தினை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் வீடு திரும்பியுள்ளார்கள்.

வவுனியா

வவுனியாவில் ஆசிரிய தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது 'மக்களைப் பொருளாதார சுமையிலிருந்து காப்பாற்று, அரச நிறுவனங்களை விற்பனை செய்வதை நிறுத்து, அடிப்படை சட்டங்களைச் சீரழிக்காதே, முதலாளிகளுக்கு வரிச் சலுகை உத்தியோகஸ்தர்களுக்கு வரி அறவீடு' உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் பத்தைகளைத் தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஆசிரியர் சேவா சங்கம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, வைத்தியர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர். 

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம்: மக்கள் அவதி (Video) | Sri Lankan Protests

 புத்தளம்

புத்தளம் நகரிலுள்ள பிரதான தபால் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வாழ்க்கைச் சுமை, அதிகரிப்பு மற்றும் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு மற்றும் பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இப் பணிபகிஷ்கரிப்பு முன்டுக்கப்ட்டுள்ளது. 

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம்: மக்கள் அவதி (Video) | Sri Lankan Protests

கிளிநொச்சி

தொழிற்சங்க நடவடிக்கையில் தபால் ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம்: மக்கள் அவதி (Video) | Sri Lankan Protests

அக்கரைப்பறு

அரச வங்கிகள் மூடப்பட்டிருந்தமையால் வாடிக்கையாளர்கள் அசௌகரியங்களுக்குள்ளானதுடன், பாதிக்கப்பட்டதையும் காண முடிந்தது. இதேநேரம் ஆசிரியர்களின் பணிப்பகிஸ்கரிப்பால் இன்று நடைபெறவிருந்த மூன்றாம் தவணைப் பரீட்சையானது பாடசாலைகளில் நடைபெறவில்லை. ஆயினும் சில பாடசாலைகளில் அதிபர் வருகை இருந்தபோதிலும் ஆசிரியர்களின் மாணவர்கள் சமூகம் கொடுக்காத நிலையினயும் அவதானிக்க முடிந்தது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டம்: மக்கள் அவதி (Video) | Sri Lankan Protests

திருகோணமலை 

தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்புச் சபை திருவண்ணாமலை பிரதேச பொறியாளர் காரியாலயத்திற்கு முன்னால் ஊழியர்கள் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், மீதமுள்ள சம்பளப்படிகள், மருத்துவ விடுப்பு படிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். மருத்துவ விடுமுறைக்கான கொடுப்பனவை தடுக்காதே அநியாயமாக அறவிடப்படும் விடுதி வாடகைகள் உடனடியாக குறைக்கப்பட வேண்டும் போன்ற பதாகைகளை ஏந்தியவாறு கோசமிட்டுள்ளனர்.

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்றைய பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US