வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கிய தொழிற்சங்கங்கள்
பொருட்களின் விலை அதிகரிப்பு, மின்சார கட்டண உயர்வு, வங்கி கடன், வட்டி அதிகரிப்பு, சம்பளத்திக்கான வரி விதிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதன் காரணமாக பொது மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
47 தொழிற்சங்கங்கள் பணிப் பகிஸ்கரிப்பு
இதன்படி, அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவ பீட விரிவுரையாளர்கள், மின்சார பொறியியலாளர்கள், வங்கி சேவை ஊழியர்கள், பெட்ரோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள், வீதி அபிவிருத்தி, கல்வி துறை சார்ந்தவர்கள் உள்ளிட்ட 47 தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.
அரச மற்றும் அரச அனுசரனைப் பெற்ற பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்றைய பணிப்பகிஸ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
வங்கிக் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்தல், ரூ.20,000 வாழ்வாதார உதவித்தொகை வழங்குதல், மின்கட்டணத்தைக் குறைத்தல், ஊதியம் மற்றும் ஓய்வூதியக் குறைப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துளளனர்.