போலி NVQ சான்றிதழ் வழங்கிய 81 கல்வி நிறுவனங்கள் இடைநிறுத்தம்: கோப் குழு நடவடிக்கை
நிதி ஆதாயத்தை மட்டுமே கருதி தரமற்ற NVQ சான்றிதழ் பாடநெறிகளை நடத்திய 81 கல்வி நிறுவனங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கோப் (COPE) உபகுழு அறிவித்துள்ளது.
குறித்த நிறுவனங்களின் பெயர்களை பத்திரிகை விளம்பரங்கள் மூலம் வெளியிடுவதற்கு முறையான பொறிமுறையை உருவாக்கவும், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் கோப் குழு பரிந்துரைத்துள்ளது.
இதன்போது, போலி NVQ சான்றிதழ்களை வழங்கும் நிறுவனங்களை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் கோப் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
சட்ட நடவடிக்கை
NVQ சான்றிதழ்களை QR குறியீடுகள் மூலம் அடையாளம் காண முடியும் என்றாலும், சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தற்போதுள்ள குறைபாடுகளை பூர்த்தி செய்ய சட்டத்தில் காணப்படும் விடயங்களை திருத்த நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழு அறிவுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, கல்வி அமைச்சு, மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு, தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபை பல நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |