இராமேஸ்வரத்தில் கடற்றொழிலில் ஈடுபட்ட 8 சிறார்கள் மீட்பு: படகு உரிமையாளர்களுக்கு அபராதம்
இராமேஸ்வரம் கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து செல்லும் விசைப்படகில் 18 வயதுக்கு கீழ் உள்ள 8 சிறார்கள் கடற்றொழிலாளர்களாக பயன்படுத்தியது கண்டு பிடிக்கபட்டு படகு உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்ததுடன், அரசு வழங்கும் மானிய டீசல் மற்றும் மீன்பிடி அனுமதிச்சீட்டு ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் - ராமேஸ்வரம் கடற்றொழில் துறைமுகத்தில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடும் வழக்கில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் இராமேஸ்வரம் விசைப்படகுகளில் சிறார்கள் கைது செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
திடீர் சோதனை நடவடிக்கை
இதன் அடிப்படையில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவின் பேரில் ராமேஸ்வரம் கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடற்றொழிலுக்கு செல்லும் கடற்றொழில் படகுகளில் சிறார்கள் கடற்றொழிலில் பயன்படுத்தபடுகிறார்களா என்பது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், தொழிலாளர் நல வாரியம் மற்றும் மீன் வளத்துத்துறை அதிகாரிகள் கூட்டாக திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.
இதன்போது, நேற்று முன்தினம்(26) இராமேஸ்வரம் கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடற்றொழிலுக்கு சென்று நேற்று(27) காலை கரை திரும்பிய 8 கடற்றொழில் படகுகளில் 8 சிறார்கள் கடற்றொழிலில் பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அந்த எட்டு சிறார்களை மீட்ட தொழிலாளர் அமலாக்கப் பிரிவு உதவி ஆணையர் மலர்விழி தலைமையில் அதிகாரிகள் சிறார்கள் கடற்றொழிலுக்கு வரக்கூடாது, பள்ளிக்கு செல்லும் மாறு அறிவுரை வழங்கியதுடன் சிறார்களை கடற்றொழிலில் பயன்படுத்திய விசைப்படகின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறார்களை கடற்றொழிலில் ஈடுபடுத்தியமைக்கு தமிழக அரசால் வழங்கப்படும் கடற்றொழில் அனுமதி சீட்டு மற்றும் மானிய டீசல் இந்த வழக்கு முடியும் வரை ரத்து செய்யப்படுவதாக மீன்வளத்துறை உதவி இயக்குனர் அப்துல் காதர் ஜெயரானி உத்தரவிட்டுள்ளார்.
மேலும்,கடற்றொழில் விசைப் படகுகளில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களை தொழிலுக்காக பயன்படுத்தினால் படகு உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை உதவி இயக்குனர் எச்சரித்ததோடு, கடற்றொழிலாளர் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டும் கடற்றொழிலுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |