இலங்கையில் மத சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் : அமெரிக்கா குற்றச்சாட்டு
இலங்கையில் மதசிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் தொடர்வதாக தெரிவித்துள்ள அமெரிக்கா இந்த நடவடிக்கைகளிற்கு அரச அதிகாரிகள் ஆதரவளிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
2023 ம் ஆண்டு மத சுதந்திரம் தொடர்பான வருடாந்த அறிக்கையில் அமெரிக்கா இதனை தெரிவித்துள்ளது. அமெரிக்கா மேலும் தெரிவித்துள்ளதாவது,
உள்ளுர் பெரும்பான்மை மதசமூகத்தின் உறுப்பினர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக தெரிவித்த மதசிறுபான்மையினத்தவர்கள் அவர்களிற்கு அரச அதிகாரிகள் ஆதரவளித்ததாக தெரிவித்தனர்.
பௌத்த கிராமங்களில் கிறிஸ்தவர்கள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் அல்லது மதவழிபாட்டிற்காக பௌத்தசாசன அமைச்சின் அனுமதியை பெறவேண்டும் என வேண்டுகோள் விடுப்பவர்களிற்கு ஆதரவாக அரசஅதிகாரிகள் செயற்பட்டனர் என கிறிஸ்தவர்களிற்கு எதிரான வன்முறைகளை ஆராய்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் தேசியகிறிஸ்தவ சுவிசே கூட்டணி அமைப்பு (என்சிஈஏஎஸ்எல் )அமைப்பு இதனை ஏற்றுக்கொண்டதுடன் பொலிஸாரும் அரச அதிகாரிகளும் சிறுபான்மை மதசமூகத்தினர் துன்புறுத்தப்படுவதிலும் அவர்களுடைய மதவழிபாட்டுதலங்கள் தாக்கப்படுவதிலும் தொடர்புபட்டுள்ளனர் என கிறிஸ்தவ குழுக்கள் தொடர்ந்தும் தெரிவித்துவருவதாக குறிப்பிட்டுள்ளனர்.
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள்
மேலும் அவர்கள் பெரும்பான்மை மதகுழுவின் பக்கம் சாய்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மே 23ம் திகதி யாழ்மாவட்டத்தில் தையிட்டி என்ற இடத்தில் தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பௌத்தவிகாரை என அவர்கள் சொல்வதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் நீதிமன்ற உத்தரவை மீறியமைக்காக கைதுசெய்யப்பட்டதாக சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் உள்ளுர் ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.
பொலிஸார் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனை அங்கிருந்து வெளியேற்றினர். மே 24ம் திகதி மல்லாகம் நீதிமன்றம் 9 பேரையும் பிணையில் விடுதலை செய்ததுடன் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்கியது.
குறிப்பிட்ட பௌத்த ஆலயத்தை சுற்றியுள்ள பகுதியில் அந்தபகுதி விவசாயிகளிற்கு 12 ஏக்கர் நிலமிருப்பதாகவும் உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்த காலம் முதல் இராணுவம் அந்த பகுதியை ஆக்கிரமித்துள்ளதாகவும் சிவில் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.
2019 உயிர்த்த ஞாயிறு இடம்பெற்றதை தொடர்ந்து தற்போது வரை பொலிஸாரின் கண்காணிப்பினையும் துன்புறுத்தல்களையும் எதிர்கொண்டுள்ளதாக முஸ்லிம் அரசசார்பற்ற அமைப்புகள் தெரிவித்துள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முஸ்லிம்களின் குடும்பத்தவர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்களும் தாங்கள் தொடர்ந்தும் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
அரசாங்க பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை விசாரணை செய்கின்றனர்.
அரசாங்கம் முஸ்லிம் சமூகத்தினை சிங்கள பௌத்த சமூகத்தின் மேலாதிக்கத்திற்கான கலாச்சார நில சனத்தொகை ஆபத்தாக கருதுகின்றது என சிறுபானமை சமூக பிரதிநிதிகளும் அரசசார்பற்ற அமைப்புகளும் தெரிவித்தன. இலங்கையில் சட்டவிரோதமான மதமாற்றத்தை கிறிஸ்தவ சமூகம் முன்னெடுப்பதாகவும் இந்துகள் பௌத்தர்களின் தொல்பொருள்பகுதிகளை ஆக்கிரமிப்பதாகவும் அரசாங்கம் கருதுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
பௌத்த குழுக்களின் அச்சுறுத்தல்கள்
இலங்கையில் அனைத்து மதவழிபாட்டுதலங்களையும பதிவு செய்யவேண்டும் என்ற 2022 ம் ஆண்டின் சுற்றுநிரூபம்தற்போதைய சட்டத்தின் அடிப்படையிலானது இல்லை அரசமைப்பிற்கு முரணானது என சிவில் சமூக அமைப்பினரும் சட்டத்தரணிகளும் தெரிவிக்கின்றனர்.
அரசாங்கம் இந்த சட்டத்தை சிறுபான்மையினத்தவரின் வழிபாட்டுதலங்களை இலக்குவைப்பதற்கு பயன்படுத்துகின்றது என என்சிஈஏஎஸ்எல்லும் சிவில்சமூக பிரதிநதிகளும் தெரிவிக்கின்றனர். பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை காண்பிக்காவிட்டால் கிறிஸ்தவவழிபாட்டுதலங்களை அரசாங்க அதிகாரிகள் சட்டவிரோதமானது அல்லது அனுமதியளித்தது என கருதுகின்றனர் பதிவு செய்யாவிட்டால் சட்டநடவடிக்கைகளை எடுப்போம் என எச்சரிக்கின்றனர் என கிறிஸ்தவ குழுக்கள் தெரிவிக்கின்றன.
கிறிஸ்தவ குழுக்கள் பதிவு செய்ய முயலும்போது அந்த நடவடிக்கை தீர்வின்றி தொடர்வதாக அந்த குழுக்கள் தெரிவிக்கின்றன.ஒரு தேவலாயம் தன்னை பதிவு செய்வதற்கான முயற்சிகளில் பலவருடங்களாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் இலங்கையின் தேசியகிறிஸ்தவ சுவிசே கூட்டணி அமைப்பு அச்சுறுத்தல் மிரட்டல் போதகர்கள் அவர்களின் வழிபாடுகளிற்கு எதிரான வன்முறைகள் வழிபாடுகளை தடுத்தல் என 43 கிறிஸ்தவ விரோத சம்பவங்களை பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
2022 இல் இந்த எண்ணிக்கை 80 ஆக காணப்பட்டது. பௌத்த குழுக்களின் அச்சுறுத்தல்கள் வன்முறைகளிற்கு சிலவேளை பௌத்த மதகுருமார் தலைமை தாங்கினார்கள் அதனை தூண்டினார்கள் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பொலிஸார் ஆராதனைகளை நடத்தியமைக்காக போதகர்களை குற்றம்சாட்டவேண்டும் என தெரிவித்துள்ளதுடன் போதகர்களே அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். முஸ்லிம்களிற்கு எதிரான 9 சம்பவங்களையும் இந்துகளிற்கு எதிரான 13 சம்பவங்களையும் தேசியகிறிஸ்தவ சுவிசே கூட்டணி பதிவு செய்துள்ளது.
2023 இல் குருந்தூர் மலையில் சமயச்சடங்குகளை நடத்துவது தொடர்பான இனமதப்பதற்றம் நிலவியது. ஜூலை 14ம் திகதி 100 சிங்கள ஆர்ப்பாட்டக்காரர்கள் பௌத்த பிக்குமார்கள் பொலிஸார் மற்றும் அதிகாரிகள் இந்துக்களின் பொங்கல் பூஜையை தடுக்க முயன்றனர் என தமிழ் ஊடகங்கள் தெரிவித்தன.
முல்லைத்தீவு நீதிமன்றம் முன்னர் உத்தரவை வழங்கியிருந்த போதிலும் பொலிஸார் இது அமைதிக்கு பாதகம் ஏற்படுத்தும் என தெரிவித்தனர். 2022 இல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய பின்னர் 2020 இல் உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவத்திற்கான ஜனாதிபதி செயலணி செயற்படுவதை நிறுத்தியது என சிவில் சமூக அமைப்புகள் தெரிவித்தன.
தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்வது சமயப்பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பது இந்த குழுவின் செயலாகும். சிறுபான்மை இன அரசியல்வாதிகள் உட்பட விமர்சகர்கள் இந்த பணிக்குழு பாரம்பரியத்தை பாதுகாப்பது என்ற பெயரில் மத்திய அரசின் நில அபகரிப்புக்கு வழிவகுக்கும் என்று அஞ்சுவதாக தெரிவித்தனர்.
பல பௌத்த பிக்குகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாரம்பரியமாக தமிழ் மற்றும் முஸ்லிம் நிலங்களை ஆண்டு முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகவும் பாதுகாப்புப் படையினர் செயலணியின் முன்னாள் உறுப்பினர்களுக்கு தொடர்ந்து மௌன ஆதரவை வழங்குவதாகவும் கூறியுள்ளனர்.
குருந்தூர் மலையில் பௌத்தவிகாரைகளை அமைக்கும் நடவடிக்கைகளில் தொல்பொருள் திணைக்களம் தொடர்ந்தும் ஈடுபட்டது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |