கௌரவமான உரிமை கோரி பொத்துவிலில் கவனயீர்ப்பு போராட்டம் (Photos)
வடக்கு, கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என வலியுறுத்திய கவனயீர்ப்பு போராட்டம் பொத்துவில் ஏத்தம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல்முனைவுத் திட்டத்தின் 71ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (10.10.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வடக்கு, கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் நாங்கள் நாட்டை துண்டாடவோ, தனியரசோ கேட்கவில்லை.

அதிகாரப் பரவலாக்கம்
இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும். 13வது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்க துக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது.
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்போம், எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை, மத வழிபாடு எங்கள் சுதந்திரம், எமது மத தளங்களின் புனிதத்தை கொச்சைப்படுத்தாதே, இந்து மத ஆலயங்களின் இடங்களை திட்டமிட்டு சுபீகரிக்காதே என பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இந்த போரட்டத்தில் முழங்காவில் உள்ள பெண்கள், ஆண்கள்,இளைஞர்கள் மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 12 மணி நேரம் முன்
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri