கௌரவமான உரிமை கோரி புதுக்குடியிருப்பில் 68வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் (Video)
வடக்கு, கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என வலியுறுத்திய கவனயீர்ப்பு நடவடிக்கை புதுக்குடியிருப்பு தேவிபுரம் கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல்முனைவுத் திட்டத்தின் 68ஆவது நாள் கவனயீர்ப்பு நடவடிக்கை நேற்று (07.10.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாட்டிற்குள் கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வினை வலியுறுத்தியும், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப்பரவலாக்கம் என்பது ஜனநாயக உரிமையாகும்.
அதிகாரப்பரவலாக்கத்துக்கான உரிமை
இந்நிலையில்13ஆவது திருத்தச்சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப்பரவலாக்கத்துக்கான உரிமையினை உறுதிப்படுத்துகின்றது என்பதை வலியுறுத்தியும் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இராணுவத்தினர் எங்கள் நிலப்பரப்பினை ஆக்கிரமித்துள்ளார்கள், எனது நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது இவ்வாறு தங்களின் உரிமையினை எடுத்துக்கூற முடியாத மக்கள் இருக்கின்றார்கள்.
எங்கள் நிலப்பரப்பில் இராணுவத்தினர் தேவையில்லை, மொழி உரிமை எங்களுக்கு உள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டம்
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும். இதனால் எங்களுக்கு பயங்கரவாத தடைச் சட்டம் தேவையில்லை.
இங்குள்ள இராணுவமாக இருந்தாலும் சரி புலனாய்வு துறையாக இருந்தாலும் சரி எங்களுடன் சகஜமாகவும் அன்பாகவும் நடந்து கொள்கின்றார்கள்.
கன்னக்கோல் வைப்பதற்கு இங்கு ஆட்கள் இல்லை. நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என வயயோதிப தாயார் ஒருவர் தெரிவித்துள்ளார்.



