கௌரவமான அரசியல் தீர்வை கோரி கவனயீர்ப்பு போராட்டம்(Photos)
வடக்கு-கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 65 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (04.10.2022) காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டம் மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குஞ்சுக்குளம் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
கெளரவமான அரசியல் தீர்வு
வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
குஞ்சுக்குளம்,பெரிய முறப்பு ஆகிய கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், இளைஞர்கள்,விவசாயிகள் என பலர் கலந்துகொண்டுள்ளனர். இதன்போது குஞ்சுக்குளம் கிராம மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
கவனயீர்ப்பு போராட்டம்
'கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்'எனும் தொனிப் பொருளில் வடக்கு - கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெறவுள்ளது.
இந்த செயல் திட்டத்தின் 65 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு- கிழக்கு மடு குஞ்சுக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
குறித்த போராட்டம் வடக்கு-கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் 100 நாட்கள் வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
