ஐரோப்பாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்தவர் பரிதாபமாக மரணம்
இலங்கைக்கு சுற்றுலா பணம் மேற்கொள்ள நெதர்லாந்தில் இருந்து வந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
எல்ல பிரதேசத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஒன்பது வளைவு பாலத்தை பார்வையிட்ட வெளிநாட்டவர் நேற்று வளைவு பாலத்திற்கு அருகில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் நெதர்லாந்தின் வெனிசுலாவில் வசிக்கும் டச்சு நாட்டவரான அன்டோனியஸ் பீட்டர் என்ற 69 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய பிரஜை மரணம்
அவர் தனது 62 வயது காதலி மற்றும் 18 டச்சு நாட்டவர்கள் கொண்ட குழுவுடன் சுற்றுலாவிற்காக இலங்கைக்கு வந்திருந்தார்.
பின்னர், அவர்கள் எல்ல பகுதியை பார்வையிட வந்து பண்டாரவளை நகரில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலா ஹோட்டலில் தங்கினர்.
நேற்று எல்ல வரலாற்று சிறப்புமிக்க ஒன்பது வளைவு பாலத்தை பார்வையிட குழு வந்தபோது, இந்த நபர் திடீரென உயிரிழந்துள்ளார்.
அவரது மரணம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.





ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

அய்யனார் துணை சீரியல் நடிகைக்கு கிடைத்த விருது.. விஜய் டெலிவிஷன் விருது மேடையில் ஸ்வீட் சர்ப்ரைஸ் Cineulagam
