இரு பிரபல பாடசாலை மாணவர்களுக்கிடையில் மோதல்! ஏழு பேர் வைத்தியசாலையில்
பேருவளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு இடையில் நேற்று (05) ஏற்பட்ட தகராறில் 7 மாணவர்கள் காயமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
க .பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்காக இடம்பெற்ற விசேட கருத்தரங்கில் கலந்துகொண்ட இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர் குழுக்களுக்கு இடையிலே இவ்வாறு தகராறு ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
கருத்தரங்கின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் மாணவர்களுக்கடையில் ஏற்பட்ட மோதல் குறித்த ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதலில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒரு மாணவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் குறித்த பகுதியைச் சேர்ந்த மேலும் சில நபர்களும் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது,
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam