ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் வட்டி குறைப்பு - சபையில் அம்பலமான தகவல்
ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்ட வட்டி வீதத்தை குறைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு 15% வட்டி வீதத்தை தற்போதைய அரசு 7%ஆக குறைத்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
சஞ்சீவ வழக்கில் சிக்கிய பெண் சட்டத்தரணியிடம் 25 மில்லியன் மதிப்புள்ள கார்.. சிஐடி வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்
வட்டி வீதம் குறைப்பு
24 மணிநேரமும் அரசு பொய்களைப் பரப்பி, மக்களை ஏமாற்றி, தோல்வியடைந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இலட்சக்கணக்கான ஓய்வூதியர்களும், முதியவர்களும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

ஆனால் இந்த 15% வட்டி வீதத்தை இப்போது 7%ஆக குறைத்துள்ளனர். இதனால் முதிய மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |