வவுனியாவில் சட்ட விரோதமாக மாடுகள் கடத்த முற்பட்ட 7 பேர் கைது
முல்லைத்தீவில் (Mullaitivu)இருந்து பேருவளை மற்றும் கல்முனைக்கு இரண்டு லாறிகளில் நெல் காெண்டு செல்வதாக கூறி மாடுகளை ஏற்றிச் சென்ற ஏழு பேர் வவுனியா நகரில் 44 மாடுகளுடன் கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை பொலிஸார் இன்று (29.04.2024) கைது செய்துள்ளனர்.
புலனாய்வுத் தகவல்
வவுனியா பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நீண்டகாலமாக பொலன்னறுவையில் உள்ள அரிசி ஆலைகளுக்கு நெல் கொண்டு செல்லும் போர்வையில் பக்க வீதிகளை பயன்படுத்தி மாடுகளை ஏற்றிச் செல்வதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரண்டு லாறிகளில் இருந்த பசுக்களில் பெரும்பாலானவை கருவுற்ற பசுக்கள் என்றும், சில மாடுகள் நோய்வாய்ப்பட்ட விலங்குகள் என்றும் பாெலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
வவுனியா மற்றும் முல்லைத்தீவில் மாடு கடத்தலில் ஈடுபடுபவர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து திருடப்பட்ட மாடுகளை ஏற்றிச் செல்வதும் இதன் மூலம் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கஹட்டகஸ்திகிலிய, இகிரிகொல்லாவ மற்றும் வெலிசறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் சி தனபால, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமந்த விஜேசேகர ஆகியோரின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையின் கீழ் சந்தேக நபர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
வவுனியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமைப் பொலிஸ் பரிசோதகர் எம்.கே.அழகியவண்ண, உப பொலிஸ் பரிசோதகர் ஜீவண்ண, பொலிஸ் சார்ஜன்ட் ரன்வல, பொலிஸ் கான்ஸ்டபிள் வீரசேன, பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி திஸாநாயக்க ஆகியோர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
