ரணில் - மைத்திரி இரகசிய சந்திப்பு : சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல் களம்
இலங்கையில் கடும் அரசியல் நெருக்கடிகளையும், வழக்குகளையும் எதிர்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena), சில நாட்களுக்கு முன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை(Ranil Wickremesinghe) நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
தனது சொந்தத் தேவைக்காக ஜனாதிபதியைச் சந்தித்துள்ள அவர், அதன்போது சமகால அரசியல் நிலைவரம் குறித்தும் பேசியுள்ளார் என்று தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மைத்திரிக்கு இடைக்காலத் தடை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி ரணிலுடன் சேர்ந்துகொண்டமைக்காக அவர்களைக் கட்சிப் பொறுப்புக்களில் இருந்து நீக்கியிருந்தார் மைத்திரி.

அதையடுத்து மைத்திரிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை அவர் வகிக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அப்படி இருந்தும்கூட, தனது சொந்தத் தேவைக்காக ஜனாதிபதியைச் சில நாட்களுக்கு முன் மைத்திரி சந்தித்துள்ளார்.
மைத்திரியின் இந்த இரட்டை வேடத்தை அவரால் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட அந்த எம்.பிக்களே அம்பலப்படுத்தியுள்ளார்கள் என்று அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஏமனில் பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள் - உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் News Lankasri
வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! Manithan