நற்சான்று பத்திரங்களைக் கையளித்த இலங்கைக்கான புதிய தூதுவர்கள்
இலங்கைக்குப் புதிதாக நியமனம் பெற்று வந்த தூதுவர்கள் 7 பேர் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் உத்தியோக பூர்வமாக தங்களது நற்சான்று பத்திரங்களை கையளித்துள்ளனர்.
ஆர்ஜன்டீனா குடியரசு, சிம்பாப்வே குடியரசு, இஸ்ரேல், பிலிபைன்ஸ் குடியரசு, டஜிகிஸ்தான் குடியரசு, கம்போடியா இராச்சியம் மற்றும் டென்மார்க் இராச்சியம் ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்களே இவ்வாறு நியமனம் பெற்றுள்ளனர்.
இதற்கமைய, நற்சான்று பத்திரங்களைக் கையளித்த தூதுவர்களின் பெயர் விவரம் வருமாறு,
01. மாரியானோ அகுஸ்டின் கவ்சினோ – புதுடில்லியிலுள்ள ஆஜன்டீனா குடியரசின் தூதரகம்
02. ஸ்டெல்லா ந்கொமோ – புதுடில்லியில் உள்ள சிம்பாப்பே தூதரகம்
புதிய தூதுவர்கள்
03. ரூவென் ஹவீயர் அசார் – புதுடில்லி இஸ்ரேல் தூதரகம்
04. நினா பி. கயிங்லெட் – டகாவிலுள்ள பிலிபைன்ஸ் துதரகம்
05. லுக்மொன் போபோகலொன்சோடா – புது டில்லியிலிருக்கும் டஜிகிஸ்தான் குடியரசு தூதரகம்
06. ரத் மெனி – புதுடில்லியில் உள்ள கம்போடியா இராச்சியத்தின் தூதரகம்
07. ரஸ்மஸ் கிறிஸ்டென்சன் – புதுடில்லியிலுள்ள டென்மார்க் இராச்சியத்தின் தூதரகம்
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உள்ளிட்டவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

வரலாற்றில் முதல் முறையாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தமிழ் பெண் எம்.பியுடன் முள்ளிவாய்க்கால் நினைவு கூட்டம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





