உள்ளூராட்சி சபைகளின் பிரதான பதவிகளுக்கான பெயர் விபரங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளின் பிரதான பதவிகளுக்கு பரிந்துரைக்கப்படுபவர்களின் பெயர் விபரங்களை ஒருவார காலத்துக்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு அறிவித்துள்ளது.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளுக்கான தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் ஜுன் மாதம் 02 ஆம் திகதியில் இருந்து ஆரம்பமாகும்.
வர்த்தமானி அறிவித்தல்
உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளில் பெரும்பான்மையைப் பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் அந்த அதிகார சபைகளின் மேயர், துணை மேயர், தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை ஒருவார காலத்துக்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளின் கன்னிக் கூட்டம் எதிர்வரும் மாதம் 2ஆம் திகதிக்குக் கூடுவதற்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை கோட்டா மட்டத்தில் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்க வேண்டும்.
உள்ளூராட்சிமன்றங்களில் பெரும்பான்மை இல்லாதவிடத்து, எதிர்வரும் மாதம் 2ஆம் திகதி சபை கூடும்போது வாக்கெடுப்பு நடைபெறும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam