வவுனியாவில் மாணவர்கள் உட்பட அறுவர் கைது!
வவுனியா குடியிருப்பு பூந்தோட்டம் வீதியில் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் மாணவர்கள் உட்பட ஆறுபேர் கைது செய்யப்பட்டனர்.
வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத்தடுப்பு பொலிசாரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பகுதியில் மாவா என்ற ஒருவகை தடைசெய்யப்பட்ட பாக்கு விற்பனை தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியிருந்தனர்.
ஆறுபேர் கைது
இந்நிலையில் குறித்த பகுதியை முற்றுகையிட்ட பொலிசார் கடையை நடாத்திச்சென்ற ஒருவரை கைது செய்துள்ளதுடன்,மாவா பாக்கினை கொள்வனவு செய்வதற்காக சென்றிருந்த மேலும் மாணவர்கள் உட்பட ஐந்து பேரையும் கைது செய்துள்ளனர்.

அங்கிருந்து மாவா, பாக்குகள், றோஸ்பவுடர், பொமலைன்ட் உள்ளிட்ட வேறு பொருட்களும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.