யாழில் வீதியை புனரமைக்க தயங்கும் மானிப்பாய் பிரதேச சபை! பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை

Jaffna Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government
By Kajinthan Apr 07, 2026 07:14 AM GMT
Report

யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியை புனரமைக்க மானிப்பாய் பிரதேச சபை பின்னடிப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து அந்த வீதியை பயன்படுத்தும் மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

இந்த வீதியை 25க்கு மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்துகின்றோம். கிட்டத்தட்ட எமக்கு தெரிய 80 வருடங்களுக்கு மேல் எமது மூதாதையர்கள் இந்த வீதியை பயன்படுத்தியதுடன் தற்போது நாங்கள் இந்த வீதியை பயன்படுத்தி வருகிறோம்.

மீண்டும் பாரியளவில் அதிகரிக்கப்படவுள்ள எரிபொருள் விலை..! அரசாங்கத்தின் திட்டம் அம்பலம்

மீண்டும் பாரியளவில் அதிகரிக்கப்படவுள்ள எரிபொருள் விலை..! அரசாங்கத்தின் திட்டம் அம்பலம்

இந்த வீதியின் ஆரம்பத்தில் உள்ள காணி ஒன்றினை வாங்கிய குடும்பம் ஒன்று, குறித்த வீதி தமக்குரிய வீதி என்றும், நாங்கள் அதனை பயன்படுத்த முடியாது என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். யாழ்ப்பாணம் உச்ச நீதிமன்றம், மல்லாகம் நீதிமன்றம் உட்பட மூன்று நீதிமன்றங்களில் அந்த வழக்கு நடைபெற்றது.

யாழில் வீதியை புனரமைக்க தயங்கும் மானிப்பாய் பிரதேச சபை! பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை | Manipay Pradeshiya Sabha Reluctant Road In Jaffna

பின்னர் குறித்த குடும்பம் அந்த வீதியை தனித்து உரிமை கோர முடியாது என்றும், அனைவரும் அந்த வீதியை பயன்படுத்த முடியும் என்றும் தீர்ப்பளித்தது.

தற்போது மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளராக இருக்கும் க.ஜெசீதன் முன்னர் உறுப்பினராக இருக்கும்போது அந்த வீதிக்கு வந்து, எமது பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தார்.

அதன்பின்னர் அந்த வீதியில் உள்ள சேற்றினை எடுத்து தனது உடை முழுவதும் பூசி விட்டு அப்படியே பிரதேச சபையின் அமர்வுக்கு சென்றார்.

வீதி புனரமைக்கப்பட வேண்டும்..

குறித்த வீதி புனரமைக்காமல் இருப்பதால் அந்த வீதியில் தான் தடக்கி விழுந்து, உடையில் சேறு பட்டுள்ளதாகவும், எனவே அந்த வீதியை உடனடியாக புனரமைக்க வேண்டும் என்றும் சபை அமர்வில் கூறினார். தற்போது அதே ஜெசீதன் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளராக இருக்கின்றார்.

உறுப்பினராக இருக்கும்போது இந்த வீதியின் பிரச்சினை தெரிந்தது, ஆனால் தவிசாளராக இருக்கும் எமது வீதிப் பிரச்சினை மறந்துபோனாரா? அவர் தவிசாளராக வந்த பின்னர் மூன்று தடவைகள் நேரில் சென்று, குறித்த வீதியை பயன்படுத்துமாறு கூறினோம்.

யாழில் வீதியை புனரமைக்க தயங்கும் மானிப்பாய் பிரதேச சபை! பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை | Manipay Pradeshiya Sabha Reluctant Road In Jaffna

ஆனால் இதுவரை அதனை புனரமைக்கவில்லை. குறித்த வீதியை கர்ப்பிணி தாய்மார், முதியவர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

மழை நேரத்தில் மாணவர்கள் காலணிகளை போட்டுக்கொண்டு அந்த வீதியால் நடக்க முடியாமல், பிரதான வீதி வரை கையில் எடுத்து சென்று, அந்த வீதியில் வைத்தே காலணிகளை அணிய வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது. அவசரம் என்றால் நோயாளர் காவு வண்டி கூட வரமுடியாத சூழ்நிலை காணப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையிலும் தற்போது எமது பகுதிக்குள் இருந்து மூன்று பிள்ளைகள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி உள்ளனர். இது எமக்கு பெருமையை தருகிறது. எனவே பிரதேச சபையானது இது குறித்து அதிக கவனம் செலுத்தி வீதியை புனரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


யாழில் வீதியை புனரமைக்க தயங்கும் மானிப்பாய் பிரதேச சபை! பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை | Manipay Pradeshiya Sabha Reluctant Road In Jaffna

நாட்டின் பல பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்கள் திடீர் மின்வெட்டு! அமைச்சர் வெளியிட்ட காரணம்

நாட்டின் பல பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்கள் திடீர் மின்வெட்டு! அமைச்சர் வெளியிட்ட காரணம்

ஹட்டன் வனப்பகுதியில் சிக்கிய வெளிநாட்டு யுவதி: விரைந்து செயல்பட்ட பொலிஸார்

ஹட்டன் வனப்பகுதியில் சிக்கிய வெளிநாட்டு யுவதி: விரைந்து செயல்பட்ட பொலிஸார்


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US