அநுரவின் அதிரடி தீர்மானம்.. தேரர்களுக்கும் சிக்கலா..! பதற்றத்தில் அரசியல்வாதிகள்
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்காக முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பாக, மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாக மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரர், திப்பத்துவவ ஸ்ரீ சுமங்கல மகா தேரர் உறுதிப்படுத்தினார்.
இதுவரை அத்தகைய கடிதம் எதுவும் ஜனாதிபதியால் பெறப்படவில்லை என்று அரசாங்கம் கூறியிருந்த சூழலில், தேரர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இருப்பினும், சம்பந்தப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டிருந்தாலும், அது ஜனாதிபதியால் பெறப்பட்டதா என்பதை உறுதியாகக் கூற இயலவில்லை என்று, ஊடகத்தினரிடம் பேசியபோது தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அவசரக் கூட்டம்..
அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் எதிர்ப்புப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் குழு ஒன்று, மல்வத்தை மற்றும் அஸ்கிரி உபய மகா விகாரையின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து, முன்மொழியப்பட்ட திருத்தம் குறித்து கலந்துரையாடியுள்ளது.

முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தம் குறித்து மக்களின் கருத்தை அறிய ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் குழு வலியுறுத்தியது.
இந்தப் பிரதிநிதிகள் குழுவில் முன்னாள் அமைச்சர்களான பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், பாட்டாலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, லசந்த அழகியவன்ன மற்றும் தயாசிறி ஜெயசேகர ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
கலந்துரையாடலின் போது, சம்பந்தப்பட்ட கடிதம் ஊடகங்களுக்கும் கிடைக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
சிக்கலான பின்விளைவுகள்..
இதற்குப் பதிலளித்த மகாநாயக்க தேரர், பிக்குகள் கடிதத்தை அனுப்பியிருந்த போதிலும், அது ஜனாதிபதிக்குக் கிடைத்ததா என்பது உறுதி செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், அக்குழுவினர் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கரான வரக்ககோட ஸ்ரீ ஞானரத்ன மகா தேரோவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜி. எல். பீரிஸ், அரசியல் கட்சிகள், சட்ட சமூகம் அல்லது மதத் தலைவர்கள் உள்ளிட்ட எந்தவொரு தரப்பினரையும் கலந்தாலோசிக்காமல் அரசாங்கம் இந்தத் திருத்தத்தை அவசரமாக அறிமுகப்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார்.
அரசாங்கம் நீதித்துறையை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சிப்பதாகவும், இது ஒருமுறை தொடங்கிவிட்டால், எங்கு போய் முடியும் என்று சொல்ல முடியாது என்றும் அவர் கூறினார். மேலும், இது ஒரு சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும் செயல்முறை என்றும் அவர் எச்சரித்தார்.
27வது திருமண நாள் நெருங்கும் நிலையில் விவாகரத்து வழக்கு வாபஸ்! விஜய்யுடன் மீண்டும் இணைவாரா? Manithan
துப்பாக்கி தோட்டாக்களுடன் சிறைக்குள் நுழைய முயன்ற பள்ளிச் சிறுமி: விசாரணையின் கூறிய காரணம் News Lankasri