எரிவாயு விலையேற்றத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை! அசேல சம்பத் கடும் சாடல்

Litro Gas LAUGFS Gas PLC Sri Lankan Peoples
By Rakesh Apr 07, 2026 06:32 AM GMT
Report

சமையல் எரிவாயுவின் அதிரடி விலையேற்றம் காரணமாக நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் இல்லத்தரசிகள் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை பாவனையாளர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். 

மக்கள் மீண்டும் விறகு மற்றும் சிரட்டை அடுப்புகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

துரதிஷ்டவசமான நிலை

உலக சந்தையில் தங்க விலையில் சடுதியான மாற்றம் - இலங்கையில் இன்று பதிவாகியுள்ள நிலவரம்

உலக சந்தையில் தங்க விலையில் சடுதியான மாற்றம் - இலங்கையில் இன்று பதிவாகியுள்ள நிலவரம்

அவர் மேலும் கூறுகையில், எரிவாயுவைப் பயன்படுத்த முடியாத அளவிற்கு விலை உயர்ந்துள்ளதால், இனிவரும் காலங்களில் மக்கள் மீண்டும் பழைய முறையிலான விறகு அடுப்புகளுக்கே திரும்ப வேண்டியுள்ளது. குறிப்பாக, சிரட்டைகளைப் பயன்படுத்தி எவ்வாறு அடுப்புகளை உருவாக்குவது என்பது குறித்து மக்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய துரதிஷ்டவசமான நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

எரிவாயு விலையேற்றத்தால் உணவக உரிமையாளர்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளனர். இதன் விளைவாக கொத்து, ப்ரைட் ரைஸ் போன்ற உணவுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சாதாரண மக்கள் அன்றாடம் உட்கொள்ளும் பராட்டா, வடை மற்றும் தேநீர் போன்ற உணவுகளின் விலைகளும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எரிவாயு விலையேற்றத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை! அசேல சம்பத் கடும் சாடல் | Fuel Price In Sri Lanka Asela Sampath Sadal

இது குறைந்த வருமானம் பெறுவோரின் போஷாக்கு மட்டத்தைப் பாரியளவில் பாதிக்கும். மனிதாபிமான அடிப்படையில், மக்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விலையில் (உதாரணமாக 200 ரூபாவிற்கு) சோறு மற்றும் பருப்பு போன்ற அடிப்படை உணவுகளை வழங்க முன்வருமாறு உணவக உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

அத்தியாவசியத் தேவைகளுக்காகப் போராட வேண்டியுள்ளது

முறையான திட்டமிடல் இல்லாத தன்னிச்சையான விலை உயர்வுகள் மற்றும் நீர் விநியோகக் குறைபாடுகளால் மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காகப் போராட வேண்டியுள்ளது. முந்தைய காலங்களில் விலைகளைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், தற்போதைய ஆட்சியாளர்கள் நிறுவனங்களின் இலாபத்தையே முதன்மையாகக் கருதுகின்றனர்.

ஈரான் முழுவதையும் நாளை கைப்பற்றுவோம்! ஈரானின் இறுதி இரவு... ட்ரம்ப் அதிரடி

ஈரான் முழுவதையும் நாளை கைப்பற்றுவோம்! ஈரானின் இறுதி இரவு... ட்ரம்ப் அதிரடி

நீர் ஆதாரங்கள் நிறைந்த இலங்கையில் தடையற்ற நீர் விநியோகத்தை வழங்கத் தவறியுள்ள அரசாங்கம், கிராம மட்டங்களில் கிணறுகள் மற்றும் குழாய் கிணறு திட்டங்களையாவது ஊக்குவிக்க வேண்டும். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் நுகர்வோரைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடி மாற்றுத் திட்டங்களை முன்னெடுக்கத் தவறினால், எதிர்காலத்தில் மக்கள் பெரும் பட்டினிச் சாவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US